மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர். கோவை மாவட்டம்,

Updated On :12 நவம்பர் 2018, 10:15 pm

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையில், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியைச் சேர்ந்த வீரன் மகன் வேலுசாமி, தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் ஜெகதீஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள், கடையின் அன்றைய விற்பனைத் தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் காங்கேயம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், வேலுசாமி, ஜெகதீஷ் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர்.
நிலைகுலைந்த அவர்களது முதுகு, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள், வேலுசாமி, ஜெகதீஷ் ஆகியோர் வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
காயம் அடைந்த இருவரும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சூலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.