தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் அனுசரிப்பு

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:27 am

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, கே.எம்.சி.எச். மருத்துவமனையில் நடைபெற்ற உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மனநல மருத்துவர் டி.சீனிவாசன் வரவேற்றார். மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, மருத்துவ இயக்குநர் டாக்டர் ஏ.என்.முருகன், மனநல மருத்துவர் சித்ரா ஜெயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகிசிவம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: ஒருவரது மன நிலைக்கும் உணர்வுகளுக்கும் அவர்களே காரணம். நாம் மனதின் வசம் செல்லக் கூடாது. மனதை நம் வசப்படுத்த வேண்டும்.  உடல் நலம் சரியில்லா விட்டால்தான் ஒருவர் பாதிக்கப்படக் கூடும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பம் முதல் சமுதாயம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் மனநலம் பேணுவது அவசியமாகிறது. பரபரப்பான வாழ்க்கை முறையில், நல்ல ஓய்வும், ஓய்வின்றி சுழலும் எண்ணங்களை கொண்ட மனிதன் நலம் பேணவே உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் உலக மனநல நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.