தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இடிதாக்கி இளைஞர் சாவு

கோவையை அடுத்த வடவள்ளி அருகே இடி தாக்கியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :22 அக்டோபர் 2018, 2:26 am

கோவையை அடுத்த வடவள்ளி அருகே இடி தாக்கியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். 
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜுவின் மகன் இளையராஜா (25). இவர், கோவை, சோமையம்பாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில்,  சோமையம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளையராஜா பணியில் ஈடுபட்டிருந்தார். 
 அப்போது அந்தப் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கோவிந்தராஜை இடி தாக்கியது.  அவரை மீட்டு கணுவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.