கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, கே.எம்.சி.எச். மருத்துவமனையில் நடைபெற்ற உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மனநல மருத்துவர் டி.சீனிவாசன் வரவேற்றார். மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, மருத்துவ இயக்குநர் டாக்டர் ஏ.என்.முருகன், மனநல மருத்துவர் சித்ரா ஜெயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகிசிவம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: ஒருவரது மன நிலைக்கும் உணர்வுகளுக்கும் அவர்களே காரணம். நாம் மனதின் வசம் செல்லக் கூடாது. மனதை நம் வசப்படுத்த வேண்டும். உடல் நலம் சரியில்லா விட்டால்தான் ஒருவர் பாதிக்கப்படக் கூடும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பம் முதல் சமுதாயம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் மனநலம் பேணுவது அவசியமாகிறது. பரபரப்பான வாழ்க்கை முறையில், நல்ல ஓய்வும், ஓய்வின்றி சுழலும் எண்ணங்களை கொண்ட மனிதன் நலம் பேணவே உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் உலக மனநல நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்

தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

