மாணவர்கள் தங்களது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பேசினார்.
கோவை ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 29 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா கலந்து கொண்டு மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானித்து சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் விரும்பும் நிலையை அடைய முடியும். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஊழலற்ற சமுதாயம் உருவாகும் வகையில் இளைய தலைமுறையினர் செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில், 996 மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளில் சிறப்பிடங்கள் பெற்ற 22 மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற்ற 10 பேராசிரியர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் கி.சுந்தரராமன், முதல்வர் எம்.லட்சுமி, பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

