சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாணவியின் பின்னணியை விசாரிக்க வேண்டும்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி. நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்த போது, நான் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்கள் சிலரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளது தெரியவந்தள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக இந்து அமைப்புகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.
தற்போது ஆன்மிக அரசியலை வலியுறுத்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால், சிலர் என் மீது கோபத்தில் உள்ளனர். பலமுறை என்னைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. எனவே, தீவிரவாத அமைப்பினர் தொடர்பாக போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா திட்டமிட்டே, உள்நோக்குடன் செயல்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.