இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அரசு, தனியார் மருத்துவமனை, கிளினிக்குகளை பதிவு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை , கிளினிக், பரிசோதனை மையங்கள்

Published On :

கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை , கிளினிக், பரிசோதனை மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், பல் மருத்துவமனை, கிளினிக், ஆயுஷ் கிளினிக், எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம் (லேப்), சித்தா கிளினிக், எம்.ஆர்.ஐ. சிடி ஸ்கேன் மையம் மற்றும் அனைத்து கிளினிக்குகளும் தமிழ்நாடு மருத்துவ ஒழுங்குமுறை சட்டம் 2018ன் படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு பதிவுக்கான விண்ணப்பத்துடன் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் என்ற பெயரில் ரூ.5 ஆயிரத்திற்கு வங்கி வரைவோலை மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
புதிய மருத்துவ ஸ்தாபனம் தொடங்கிய நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள்ளும், ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருக்கும் மருத்துவ ஸ்தாபனங்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் (மார்ச் 3, 2019) பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-2220364 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.