பொள்ளாச்சி அருகே தகராறில் நண்பரை கீழே தள்ளி கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (58). இவர் மில்களுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் செல்வராஜ் (42). இவர் பொள்ளாச்சியை அடுத்த கே.நாகூரில் விவசாயப் பணிக்கு பவர் டில்லரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே கே.நாகூர் சேந்து கிணறு வீதியில் வசித்து வரும் செல்வராஜை சந்திக்க சுப்பிரமணி தனது மனைவி சத்தியவாணியுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அப்போது, சுப்பிரமணியம், செல்வராஜும் பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ், வேகமாக தள்ளியதில் சுப்பிரமணி வீட்டு வாசலின் முன்பு கீழே விழுந்து மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குப்புசாமி சம்பவ இடத்துக்குச் சென்று சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான செல்வராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
