கஞ்சா விற்றதாக இளைஞர்கள் இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
கோவை, முத்தண்ணன்குளம் அருகே ஆர்எஸ்புரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தடாகம் சாலையைச் சேர்ந்த அருண்(21) என்பது தெரியவந்தது. இதேபோல கோவை, ரெயின்போ காலனி பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி அவரது வாகனத்தை குனியமுத்தூர் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில் 1.6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், கோவை, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிசாருதீன் (23) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.900 பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


