கோவையில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குறிச்சியைச் சேர்ந்த ஷாஜகான், ஜி.எம். நகரைச் சேர்ந்த சுபாஷ், திருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது சிங்காநல்லூர், காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதன்பேரில் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







