மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் கோவை மத்திய வனப் பயிற்சிக் கல்லூரி வனப் பாதுகாவலர் பயிற்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்ட மத்திய வனப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து வட மாநிலங்களைச் சேர்ந்த 36 உதவி வனப் பாதுகாவலர் பயிற்சியாளர்கள் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தனர்.
கல்லூரி விரிவுரையாளர் பிரதீபா மேற்பார்வையில் வந்திருந்த அவர்களுக்கு மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் முகாமில் தினந்தோறும் நடைபெறும் பணிகள் குறித்தும், சுற்றுவட்டார வனப் பகுதிகளின் நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தேக்கம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார், சென்னை கிண்டி வன உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் டாக்டர் பிரதீப், மேட்டுப்பாளையம் வனவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வியக்கவைக்கும் கருப்பு பட வசூல்! சூர்யாவின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி!

இன்றைய செய்திகள்! நேரலை

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!

விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!
விடியோக்கள்

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


