தமிழகம் முழுவதும் உள்ள 200 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிணத்துக்கடவு அக்ஷயா கல்லூரியில் தலைமைப் பண்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
பள்ளி கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த உண்டு உறைவிட பயிற்சி கிணத்துக்கடவு அக்ஷயா கல்லூரியில் 21ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து 25ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான 200 தலைமை ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மைய இணை இயக்குநர் அருள்முருகன் பயிற்சியை துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் வெள்ளிங்கிரி, கோவை கல்வி மாவட்ட அலுவலர் என்.கீதா, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி ஆர்.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, குனேஷ்வரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அக்ஷயா கல்லூரி அறங்காவலர் ரங்கராஜ், முதல்வர் ஜெயா ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








