பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குள்பட்ட ஆனைகட்டி பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
இந்த வட்டாரத்தில் உள்ள 24.வீரபாண்டி, கொண்டனூர், கஸ்தூரிநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. 24.வீரபாண்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த தொடக்க விழாவுக்கு, புரவலர் வரதராஜ், தலைமை ஆசிரியர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் வீரபாண்டி விஜயன் தலைமை வகித்து வகுப்பறையைத் திறந்து வைத்தார்.
இதில், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் பணியில் சேராத பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை மட்டும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை மூடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


