இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (52). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்றுள்ளார்.
அப்போது பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் காணாமல்போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக முருகன் அளித்தப் புகாரின் பேரில் பஜார் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


