கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் செப்சிஸ் கிருமி குறித்து கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் நிபுணர்கள் பேசியதாவது:
செப்சிஸ் என்பது உயிரை கொல்லும் ஒரு கொடிய நோய் ஆகும். இந் நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அக்கிருமி ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள பல உறுப்புகளை பாதித்து உயிரை இழக்கக் கூடிய நிலை ஏற்படும் . இவ்வகையான நோய்க்கு மருத்துவமனைகளில் 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய் குறித்து விழிப்புணர்வு எற்படுத்த கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. செப்சிஸ் நோய் பாதிப்புக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.
கருத்தரங்கின் தலைவர் டாக்டர் என்.செல்வராஜன், செயலாளர் டாக்டர் ப.கோபிநாதன் மற்றும் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 250- க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள், சுவாச பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








