அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

யானைகள் முகாமை பார்வையிட்ட வனப் பயிற்சியாளர்கள்

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் கோவை மத்திய வனப் பயிற்சிக் கல்லூரி வனப்

Updated On :23 ஜனவரி 2019, 9:20 am IST

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் கோவை மத்திய வனப் பயிற்சிக் கல்லூரி வனப் பாதுகாவலர் பயிற்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்ட மத்திய வனப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து வட மாநிலங்களைச் சேர்ந்த 36 உதவி வனப் பாதுகாவலர் பயிற்சியாளர்கள் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தனர். 
கல்லூரி விரிவுரையாளர் பிரதீபா மேற்பார்வையில் வந்திருந்த அவர்களுக்கு மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் முகாமில் தினந்தோறும் நடைபெறும் பணிகள் குறித்தும், சுற்றுவட்டார வனப் பகுதிகளின் நிலை குறித்தும் எடுத்துரைத்தார். 
இந்நிகழ்ச்சியில், தேக்கம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார்,  சென்னை கிண்டி வன உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் டாக்டர் பிரதீப், மேட்டுப்பாளையம் வனவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.