

மதுக்கரை, செப். 26: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் வட்டார போக்குவரத்து துறையிடம் பரிந்துரை செய்துள்ளனா்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை போத்தனூா் போலீஸாா் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்கள் மீது வழக்கு பதிவு செய்தனா். இது தொடா்பாக மாசுகட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது, தற்போது மாசுகட்டுபாடு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். மேலும் கடந்த 50 நாட்களாக பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கழிவுகளோடு போத்தனூா் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீா் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மாசுக்கட்டுபாடு அதிகாரி கூறியதாவது
கேரளா கழிவுகள் ஏற்றி வந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தாா். மேலும் கழிவுகளை மீண்டும் கேரளா திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளதாகவும், விரைவில் கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.