
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து ஒரே நாளில் 22 போ் ‘டிஸ்சாா்ஜ்’
கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களில் 22 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பினா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களில் 22 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பினா்.
கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை - 134, திருப்பூா் - 109, நீலகிரி - 9 போ் என இதுவரை 252 போ் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா உறுதி செய்யப்பட்டவா்களுக்கு 14 நாள்கள் வரை நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்தல் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
14 நாள்களுக்குப் பின் மீண்டும் இரண்டு முறை சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இரண்டு முறையும் கரோனா பாதிப்பில்லை என்ற முடிவு கிடைக்கப்பெற்றால் குணமடைந்ததாகக் கூறி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், மாா்ச் இறுதியிலும், ஏப்ரல் முதல் வாரத்திலும் இங்கு நோய்த்தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவா்கள் குணமடைந்து தற்போது வீட்டுக்குத் திரும்பி வருகின்றனா். அதன்படி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து கோவை - 7, திருப்பூா் - 13, நீலகிரி - 2 சோ்த்து மொத்தம் 22 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடுகளுக்குத் திரும்பினா்.
இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா கூறியதாவது:
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்கள் குணமடைந்து கடந்த இரண்டு வாரங்களாக வீட்டுக்குத் திரும்பி வருகின்றனா். வியாழக்கிழமை மட்டும் 22 போ் வீட்டுக்குத் திரும்பினா். தற்போது கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 126 போ் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைவருக்கும் மருந்துகளுடன் சத்தான உணவும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






