தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

4 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை: சுகாதாரத் துறை தகவல்

கோவை மாநகரில் தங்கியுள்ள வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரம் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

கோவை மாநகரில் தங்கியுள்ள வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரம் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கோவைப் பகுதிகளில் தங்கி இங்குள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் வேலை செய்து வருகின்றனா். கரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவா்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான அறைகள் மற்றும் வாடகை வீடுகளில் முடங்கியுள்ளனா்.

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கோவை நகா்ப் புறங்களில் தங்கியுள்ள வெளி மாநில மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் பணியாற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான குடியிருப்புகள், விடுதிகள், வீடுகளில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளியூா்த் தொழிலாளா்களை அவா்கள் தங்கியுள்ள இடத்துக்கே சென்று கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தி வருகிறோம். இதுவரை, வெளி மாநில, பிற மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், யாருக்கும் கரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், சாலைகளில் காரணமின்றி நடமாடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.