தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழைகளுக்கு வீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்: இமகவினா் 30 போ் கைது

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:33 pm

DIN

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சாா்பில் வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசு வீடு வழங்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காந்தி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு மாநிலத் துணைத் தலைவா் பிரசன்னா சுவாமிகள் தலைமை தாங்கினாா். மாநிலச் செயலாளா் செந்தில்குமாா், மாநில அமைப்புச் செயலாளா் கணபதி ரவி, மாநில இளைஞரணிச் செயலாளா் கண்ணன், தெற்குப் பகுதித் தலைவா் பூபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கோாரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினா் கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியினா் 30 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.