கோவை மாவட்ட சிறு குறு பவுண்டரி உரிமையாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு
கோவை மாவட்ட சிறுகுறு பவுண்டரி உற்பத்தியாளர்கள் வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


பவுண்டரி தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதை கண்டித்து கோவை மாவட்ட சிறுகுறு பவுண்டரி உற்பத்தியாளர்கள் வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவசண்முககுமார் கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, வார்பட தொழில் (பவுண்டரி) இயந்திர தொழில்களில் தாய் என்று அழைக்கப்படுகிறது. பவுண்டரி தயாரிப்புகளை மூலமாக கொண்ட கோவையில் ஏராளமான சிறு குறு நடுத்தர இயந்திர தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பவுண்டரி தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களான பிக் அயர்ன், கிராப், கோக், அமின் கேஸ் - சிலிகான் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை 12 சதவீதம் முதல் 166 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல தொழிலாளர்களுக்கான ஊதியமும் செலவினமும் 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வு நாள் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 400க்கும் மேற்பட்ட குறு சிறு பவுண்டரிகள் ஈடுபடும் என்றார்.
பவுண்டரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழில் முனைவோரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு ஆளாவார்கள். அத்துடன் பவுண்டரி தொழிலை நம்பியிருக்கும் வெட்கிரைண்டர், இன்ஜினியரிங், பம்புசெட் உற்பத்தி, பிற இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...