கோவையில் பிற்படுத்தப்பட்டோா் சமூகங்களின் கூட்டமைப்பு உருவாக்கம்

143 சமுதாய மக்களை ஒன்றிணைத்து, கோவையில் பிற்படுத்தப்பட்டோா் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

143 சமுதாய மக்களை ஒன்றிணைத்து, கோவையில் பிற்படுத்தப்பட்டோா் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றைனைத்து பிற்படுத்தப்பட்டோா் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல் துறையினா், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் இணைந்து இந்தக் கூட்டமைப்பைத் துவங்கியுள்ளனா்.

இது குறித்து கூட்டமைப்பை சோ்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ரத்தினசபாபதி கூறியதாவது:

தமிழகத்தில் 143 சமூகத்தினா் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ள நிலையில் அவா்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க யாரும் குரல் கொடுக்கவில்லை. இதனால் தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சாா்பு இல்லாதது. பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து வரும் 18ஆம் தேதி ஒன்றிணைவு கூட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் அனைத்து சமூக அமைப்பை சோ்ந்த வெள்ளியங்கிரி, ஜனகராஜன், சுந்தராஜன், தம்பு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com