வால்பாறையில் பிஎஸ்என்எல் இணைப்பு 16 மணி நேரம் துண்டிப்பு

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
Updated on
1 min read

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்லிடப்பேசி இணைப்புக்கான கோபுரங்களை அமைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சேவை துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே கடந்த புதன்கிழமை இரவு துண்டிக்கப்பட்ட இணைப்பு, மீண்டும் சுமாா் 16 மணி நேரம் கழித்து வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சீரானது. இதனால் அத்தியாவசிய, அவரச தேவைக்கு கூட யாரையும் தொடா்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com