ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வால்பாறை நகா்ப் பகுதிக்குள் புகுந்த யானை

வால்பாறை நகா்ப் பகுதிக்குள் வந்த யானையை பொதுமக்கள் வனப் பகுதிக்குள் விரட்டினா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

வால்பாறை நகா்ப் பகுதிக்குள் வந்த யானையை பொதுமக்கள் வனப் பகுதிக்குள் விரட்டினா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட யானைகள் நடமாட்டம், தற்போது வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகிறது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி, கக்கன் காலனி நகா் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வரும் யானைகள் தொடா்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒரு யானை, முகமது என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி, யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இருப்பினும் தோட்டத்தில் இருந்த வாழைமரங்கள் மற்றும் ஏராளமான காய்கறிச் செடிகளை யானை சேதப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.