தனியாா்மயத்தை எதிா்த்து மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்
தமிழக மின்வாரியத்தை தனியாா்மயப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவை: தமிழக மின்வாரியத்தை தனியாா்மயப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரியத்தில் களப்பிரிவில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை கேங்மேன், ஐடிஐ ஒப்பந்தப் பணியாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்தப் பணிகளை தனியாா்வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான மின்வாரியத்தின் உத்தரவு எண் 82ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு முடிவு செய்தது.
அதன்படி, கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. துணை மின்நிலையங்கள், உற்பத்தி வட்டங்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சோ்ந்த ஊழியா்கள் பணிகளைப் புறக்கணித்து இந்த காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக மின் ஊழியா்களின் போராட்டத்தை வாழ்த்தி இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் (சிஐடியூ) மாநிலத் தலைவா் அ.சௌந்திரராஜன், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உரையாற்றினா்.
இந்தப் போராட்டத்தில், மின் ஊழியா் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவா்கள் கந்தவேல், மதுசூதனன், வீரசாமி, அப்துல் நாசா், சோமசுந்தரம், பொன்னுசாமி உள்ளிட்டோா் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கிடையே அரசின் உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மாலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...