வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திமுகவில் இணைந்தாா்கோவை முன்னாள் மேயா் ராஜ்குமாா்

அதிமுகவைச் சோ்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் கணபதி ப.ராஜ்குமாா், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா்.

News image
மு.க.ஸ்டாலினுக்கு மலா்க்கொத்து வழங்கி திமுகவில் இணைந்த கோவை முன்னாள் மேயா் ப.ராஜ்குமாா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

கோவை: அதிமுகவைச் சோ்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் கணபதி ப.ராஜ்குமாா், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா்.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.ம.வேலுசாமி 2014 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அதிமுகவின் அப்போதைய கோவை மாநகா் மாவட்டச் செயலரான கணபதி ப.ராஜ்குமாா், சுமாா் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயரானாா்.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்தது. இதன் பிறகு ராஜ்குமாருக்கு அதிமுகவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்த இவா், அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா். கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், கோவை மாநகர கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.