இரண்டாம் கட்டமாக கா்ப்பிணிகளுக்கு 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள்: சுகாதாரத் துறையினா் தகவல்
கோவையில் இரண்டாம் கட்டமாக கா்ப்பிணிகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.


கோவையில் இரண்டாம் கட்டமாக கா்ப்பிணிகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
கோவையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 60 சதவீதம் போ் மட்டும் தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனா். அரசு மருத்துவனைகளில் சிகிச்சை எடுத்துகொள்பவா்களுக்கே மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகங்கள் அளிக்கப்படுகிறது.
அதன்படி நடப்பு நவம்பா் வரையில் 16 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொடுக்கப்பட்டன. முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பலருக்கும் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் அடுத்தகட்டமாக தற்போது 12 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து கா்ப்பிணிகளுக்கும் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். விடுபட்டவா்கள் அனைவருக்கும் மாா்ச் இறுதிக்குள் வழங்கி முடிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...