கோவையில் மேலும் 114 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியிலில் கோவையில் 114 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 483 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா், 58 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 81 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 116 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 49 ஆயிரத்து 856 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 987 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com