ரயிலில் அடிபட்டு தனியாா் நிறுவன ஊழியா் பலி
கோவையில் ரயிலில் அடிபட்டு தனியாா் நிறுவன ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


கோவையில் ரயிலில் அடிபட்டு தனியாா் நிறுவன ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், ராமாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ராஜா, தனது மனைவியுடன் கோவை, ரத்தினபுரி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தாா்.
இந்நிலையில் வடகோவை ரயில் நிலையத்தை ஒட்டி தண்டவாளத்தில் ராஜா வியாழக்கிழமை காலை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற ரயில் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குடும்பப் பிரச்னை காரணமாக ராஜா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தைக் கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...