புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே பேசுகிறாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன்.
Updated On :25 ஜனவரி 2020, 4:27 am

தினமணி செய்திச் சேவை

மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேராசியா் சுகுமாரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஸ்வா்ணலதா ஜோசப் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் மாலதி, நேஷனல் இன்ஷுரன்ஸ் கிளை மேலாளா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

கல்லூரி மாணவா்கள் பேருந்து படிகளில் நின்று பயணிக்கக் கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, முறையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். மது அருந்தி வாகனங்கள் இயக்கக் கூடாது. சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா். துறைத் தலைவா்கள் சிவஞானசக்தி, பாண்டியராஜ் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.