லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை

கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தில் திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

News image
Updated On :16 ஜூன் 2020, 5:37 am

DIN

கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தில் திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

சிறை நிர்வாகத்தின் பெட்ரோல் பங்குக்கு அருகே மேம்பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்திய அந்த இளைஞர் திடீரென கீழே குதித்தார். இதில் தலை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அந்த இளைஞர் பொதுமக்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குதித்துள்ளார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். பாலத்திலிருந்து குதிக்கும் முன் அந்த இளைஞர் கடவுளை வணங்கிதை மேம்பாலத்தில் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இறந்த நபர் டி-ஷர்ட் அரைக்கால் டவுசர் அணிந்து இருந்தார். 

Story image

இதுதொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த இளைஞர் ரத்தினபுரியை சேர்ந்த பிரேம்குமார் (30 )என தெரியவந்தது. இவர் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் காரில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி பேருந்து நிலையத்துக்குள் கார் ஓட்ட அனுமதி கிடையாது. எதற்காக இங்கே கார் ஓட்டி வந்தீர்கள் என விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். 

Story image

காவல்துறையினர் காரில் சோதனையிட்டபோது அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து அந்த நபரை எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தற்போது அதே இளைஞர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞரின் மனநிலையில் மாற்றம் இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேம்பாலத்தில் வாலிபர் குதித்து தற்கொலை செய்து கொண்ட போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.