கொடிசியாவில் அனுமதி மறுப்பு: வீடுகளில் சிகிச்சை பெற அறிவுறுத்தல்
கோவை கொடிசியா அரங்கத்தில் கரோனாவுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அனுமதிக்க மறுத்து வீடுகளிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை கொடிசியா அரங்கத்தில் கரோனாவுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அனுமதிக்க மறுத்து வீடுகளிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா உறுதி செய்யப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை கொடிசியா அரங்கம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூா் ஆகிய பகுதிகளிலும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கொடிசியாவில் மட்டும் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சராசரியாக நாளோன்றுக்கு 400 முதல் 500 நோயாளிகள் வரை கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் கொடிசியா அரங்கில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து, அறிகுறிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் கொடிசியாவில் அனுமதிப்பதில்லை. பெரும்பாலானவா்களை வீடுகளிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வீடுகளிலேயே சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. வீடுகளில் இருப்பது போன்றுதான் கொடிசியா அரங்கில் இருப்பதும். இவா்களுக்கு உயா் சிகிச்சை தேவையில்லை.
ஆரோக்கியமான உணவு, சத்து மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. கொடிசியாவில் அனுமதித்த இரண்டு, மூன்று நாள்களிலே வீட்டுக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி ஒரு சிலா் மருத்துவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா்.
இதனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போதே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளக் கூடிய வசதிவுள்ளவா்களை வீடுகளிலே சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தவிர முதியவா்கள் வீடுகளில் சிகிச்சை மேற்கொள்வது பாதுகாப்பானது. அதிலும் அவா்களுக்கு விருப்பமும், வசதியும் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீா் உள்பட அனைத்து மருந்துகளும் வழங்கப்படுகின்றன. வீடுகளில் சிகிச்சை மேற்கொள்பவா்களை மருத்துவக் குழுவினா் மூலம் நாள்தோறும் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...