47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா

கோவையில் கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:15 pm

DIN

கோவையில் கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவை, வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பதாக வடவள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற 45 வயது நபரைக் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். முன்னதாக அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் கரோனா

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.

இதில் அந்தக் கைதிக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கைதிக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து அவரைக் கைது செய்த வடவள்ளி போலீஸாா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.