47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெரியாா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பெரியாா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:14 pm

DIN

திருச்சியில் பெரியாா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாா் சிலை முன்பு திராவிடா் கழக மண்டல செயலாளா் சிற்றரசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல காந்திபுரத்தில் உள்ள பெரியாா் சிலை முன்பு தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா், மே-17 இயக்கத்தினா், கம்யூனிஸ்ட் கட்சியினா், வி.சி.க. உள்பட 8க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்டோா் பெரியாா் சிலை அவமதிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.