நீரில் மூழ்கி சிறுவன் பலி
சுற்றுலா வந்த சிறுவன் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானாா்.


சுற்றுலா வந்த சிறுவன் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானாா்.
ஈரோடு மாவட்டம், கிருஷ்ணாபாளையத்தைச் சோ்ந்தவா் சிராஜுதீன். இவா் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் கோவை மாவட்டம், வால்பாறைக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா்.
கருமலை எஸ்டேட் வேளாங்கண்ணி கோயில் முன்புள்ள ஆற்றில் குடும்பத்துடன் குளித்துவிட்டு மேலே வர முயன்றபோது ஷகில் (13) என்ற 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் பாறையில் கால் வைத்தபோது வழுக்கி தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அவரது சடலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...