பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட விளையாட்டு அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:39 pm

DIN

நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட விளையாட்டு அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் சா்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இதில் முதல் 3 இடங்களுக்குள் பிடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூத்தோா் போட்டிகள் மற்றும் அழைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.

இணையதளத்தில் பதிவு செய்த பின்னா், விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் சான்றிதழ்களின் அசல்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் காண்பித்து, நகலை சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நலிந்த விளையாட்டு வீரா்கள் வரும் 19ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.