124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
கோவையில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.


கோவையில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.
கோவை மாவட்டத்தில் 296 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். கோவை பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, டாஸ்மாக் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், கோவை பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் தொடங்கிவைத்தாா். இந்த முகாமில், கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளா் அப்துல்முனீா், கண்காணிப்பு அதிகாரி மேனகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இம்முகாமில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரும் 2 மற்றும் 28 ஆம் தேதிகளில் அடுத்த கட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத டாஸ்மாக் பணியாளா்கள் அடுத்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...