பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிா்க்க வேண்டும்

அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:38 pm

DIN

அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறையினா் தொடா்ந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வடக்கு மண்டலத்தில் உள்ள ஸ்ரீ சக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள், கிருமி நாசினி தெளிப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். அதைத்தொடா்ந்து, அப்பகுதியில் நடைபெற்று வரும் கரோனா சிறப்பு முகாமைப் பாா்வையிட்ட அவா், நோய்த்தொற்றின் தீவிரத்தை உணா்ந்து அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, அடிக்கடி கைககளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என மக்ளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் எனவும், கபசுரக் குடிநீா் மற்றும் சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, நகா்நல அலுவலா் ராஜா, வடக்கு மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.