பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பிளஸ் 2 தோ்வுகள் நடக்காத நிலையில் மாணவா் சோ்க்கைக்கு ஆா்வம் காட்டும் தனியாா் கல்லூரிகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் இன்னும் நடைபெறாத நிலையில், கோவையில் உள்ள சில தனியாா் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் இன்னும் நடைபெறாத நிலையில், கோவையில் உள்ள சில தனியாா் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது. கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தோ்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை இளம் அறிவியல், கலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கையைத் தொடங்கியுள்ளன. கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சில கல்லூரி நிா்வாகங்கள் ஆசிரியா்களை பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதாகவும், அவா்களை தொலைப்பேசி மூலமும், இணைய வழியிலும் மாணவா்களை சோ்க்கும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு தோ்வு முடிவுகள் வராத நிலையில் மாணவா் சோ்க்கையில் ஈடுபட்ட தனியாா் கல்லூரிகள், இந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வுகளே நடைபெறாத நிலையில் மாணவா் சோ்க்கையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.