சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தலை இங்கே... முண்டம் எங்கே? முத்து என்கிற காட்டான் - இணையத் தொடர் விமர்சனம்!

முத்து என்கிற காட்டான் இணையத் தொடர் விமர்சனம்

News image

முத்து என்கிற காட்டான்

Updated On :29 மார்ச் 2026, 12:33 pm

முத்து என்கிற காட்டான்

2.5/5

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான முத்து என்கிற காட்டான் இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மதுரையிலுள்ள ஊர் ஒன்றில், காவல்நிலையம் இயங்கி வருகிறது. அதில் சொந்த ஊரைச் சேர்ந்த சிலரே பணிபுரிகின்றனர். ஆனால், அந்தக் காவல்நிலையத்துக்கு புகார்கள் எதுவும் வராததால் அதனை மூடிவிட்டு அதிகாரிகளை வேறு ஊர்களுக்கு பணிமாற்றம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அப்படியான சூழலில் மலைப்பகுதி ஒன்றில் தலை மட்டும் வெட்டப்பட்டு கிடக்கிறது. ஆனால், உடலைக் காணவில்லை. வெட்டப்பட்ட தலை விஜய் சேதுபதியினுடையது. வெட்டியது யார்? ஏன் கொல்லப்பட்டார்? என்கிற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சிரித்தது போல் தனியாக இருக்கும் தலையை வைத்துக்கொண்டு காவலர்கள் என்னென்ன விஷயங்களை எதிர்கொள்கின்றனர்? என்பதே முத்து என்கிற காட்டான் தொடரின் கதை.

தமிழில் வெளியாகும் இணையத் தொடர்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. சுழல் தொடர் மட்டும் கவனிக்கப்பட்டது. காரணம், உருவாக்க ரீதியாகவும் கதையாகவும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கூடியதாக இருந்ததால் வரவேற்பு கிடைத்தது.

முத்து என்கிற காட்டான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு காரணம் இயக்குநர் மணிகண்டன். கடைசி விவசாயி திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் மேற்பார்வையில், இயக்கத்தில் உருவான தொடர் என்பதால் டீசரே ஒரு உணர்வைக் கொடுத்தது.

Listicle image

ஆனால், முத்து என்கிற காட்டான் கதையின் மையம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்த தொடராக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. கொல்லப்பட்ட விஜய் சேதுபதியின் தலையைக் கொண்டு அவர் யாரென அறியப்படுவதற்கான கிளைக்கதைகள் ஒருகட்டத்தில் சோர்வையே அளிக்கின்றன.

10 எபிசோடுகளில் முதல் எபிசோடிலேயே கதை ஆரம்பித்தாலும் அதன் அடுத்தடுத்த பகுதிகளின் இறுதியில் பெரிய திருப்பங்களோ காட்சிகளில் உணர்வு தருணங்களோ ஏற்படாததால் சாதாரணமாகவே இத்தொடர் முடிகிறது. இதை கமர்சியல் அம்சங்களுடன் திரைப்படமாக உருவாக்கியிருந்தாலும் பேசப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு மனிதனுக்கு யாரும் இல்லாததால் அவன் எடுக்கும் விபரிதமான முடிவை பேசுவது நெருடலானா விஷயமாகவே தெரிகிறது.

விஜய் சேதுபதியுடன் வடிவேல் முருகன், பார்வதி, முத்துக்குமார், சிங்கம் புலி உள்ளிட்டோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பையே கொடுத்திருக்கின்றனர்.

ஆறுதலாக பீரியட் கால மேக்கிங் மற்றும் சில காட்சிகள் நன்றாக இருந்தன. குறிப்பாக, உணவகம் ஒன்றில் ஊழியர் மரியாதை குறைவாக நடத்தப்படுவதைப் பார்க்கும் விஜய் சேதுபதி அவரையே அக்கடைக்கு முதலாளியாக மாற்றுவது.

இன்னும் கூடுதலான நல்ல காட்சிகளை வைத்து தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால் சிறப்பான தொடராகவே வந்திருக்கும். ஆனால், சாதாரண பொழுதுபோக்கு தொடர் என்கிற இடத்திலேயே முத்து என்கிற காட்டான் நின்றுவிட்டது.

முத்து என்கிற காட்டான் - ஜியோ ஹாட்ஸ்டார் வெளியீடு

Summary

The web series Muthu Engira Kattan, starring actor Vijay Sethupathi, has been released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.