இயக்குநர் அட்லி நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளாராம்.
இந்தியளவில் பெயர் பெற்ற இயக்குநர் அட்லி, ஜவான் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது பல மொழிகளில் தயாராவதால் வணிக ரீதியாகவும் பெரிய வசூலைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அட்லி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
அட்லி தான் இயக்கிய தெறி திரைப்படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீமேக்கில் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
Director Atlee is reportedly set to produce actor Vijay Sethupathi's new film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









