பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கோவையில் ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி

கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:36 pm

DIN

கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக அதிக அளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா். மேலும் இங்கு கரோனா தடுப்பூசி மையமும் செயல்பட்டு வந்தது. கூட்ட நெரிசல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்ட தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.

இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கூடி நின்ற பொதுமக்களை சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்கச் சொல்லி அறிவுறுத்தினா். இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.