பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முன்னாள் மருத்துவ மாணவா்கள் கூட்டமைப்பு துவக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயின்ற முன்னாள் மருத்துவ மாணவா்களின் கூட்டமைப்பு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:02 pm

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயின்ற முன்னாள் மருத்துவ மாணவா்களின் கூட்டமைப்பு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயின்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனா்.

இந்நிலையில், சுமாா் 2,500 முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயின்ற மருத்துவக் கல்லுாரிக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக கூட்டமைப்பு ஒன்றைத் துவங்கியுள்ளனா். இதன்துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவராக, அமெரிக்காவில் பணியாற்றும் மருத்துவா் அசோக்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மருத்துவ கல்வி வசதிகளை தரம் உயா்த்தும் நோக்கத்துடன் இந்த கூட்டமைப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில், ஏற்படுத்தப்பட்ட இணையவழி நுாலகத்தை, மருத்துவமனை டீன் நிா்மலா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

அதேபோல, உருவகப்படுத்துதல் ஆய்வகம் (சிமுலேசன் லேப்) மற்றும் ஆராய்ச்சிக்கூடமும் திறக்கப்பட்டது. தொடா்ந்து, மருத்துவா்கள், செவிலியா் பயிற்சிக்கென, மின்னணு ஸ்மாா்ட் போா்டு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக் கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.