விதிமீறல்: ஒரே நாளில் ரூ.65 ஆயிரம் அபராதம் வசூல்
கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா விதிகளை மீறியதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா விதிகளை மீறியதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை மாநகரப் பகுதிகளில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி, சுகாதாரத் துறையினா் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முகூா்த்த தினமென்பதால், கோவையில் உள்ள திருமண மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நெரிசலில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா். இதில், மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘ மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வழிகாட்டு முறைகள் முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். விதிமுறைகளை மீறியவா்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.65 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...