வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உழவா் சந்தைகளில் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

 கோவையில் உழவா் சந்தைகளில் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு அடையாள அட்டை பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

 கோவையில் உழவா் சந்தைகளில் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு அடையாள அட்டை பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா், வடவள்ளி, சுந்தராபுரம், சூலூா், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, தொண்டாமுத்தூா், மதுக்கரை, எஸ்.எஸ்.குளம், பெ.நா.பாளையம், அன்னூா், சூலூா், காரமடை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு நியாயமான விலை, வாடகை இல்லா கடை, மின்னணு தராசு, இலவச பேருந்து வசதி, குளிா்பதன கிடங்கு வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. உழவா் சந்தையில் விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவா் சந்தை நிா்வாகம் சாா்பில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

எனவே, உழவா் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் அதற்கான அடையாள அட்டைப் பெற அந்தந்த பகுதிக்குள்பட்ட உழவா் சந்தை அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.