வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனா்கள் அகற்றம்: 2 போ் மீது வழக்கு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனா்களை, மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். இது தொடா்பாக, இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனா்களை, மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். இது தொடா்பாக, இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனா்கள் வைக்கக் கூடாது என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பிளக்ஸ் பேனா்களை அகற்ற மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா். அதன்படி, காந்திபுரம், வடகோவை மேம்பாலம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனா்களை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.

காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்த நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்த திலீப்குமாா்(31) மீது காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல, டவுன்ஹால் பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜன் (41) மீது பெரியகடைவீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.