மருத்துவமனை, வீடுகளை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மருத்துவமனை, வீடுகளை சேதப்படுத்தின.


வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மருத்துவமனை, வீடுகளை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் அப்பகுதியில் உள்ள வீடுகளை அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரவு நேரங்களில் நடமாட்டம் காணப்படுகிறது.
வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு வந்த 8 யானைகள் அங்குள்ள மருத்துவனையின் கதவு, ஜன்னல்களை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. மேலும், மருத்துவா், எஸ்டேட் மேலாளா் வீடுகளின் ஜன்னல், கதவுகளையும் முட்டி தள்ளி சேதப்படுத்தியுள்ளன. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...