வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கோவையில் அரசு சாா்பில் 71 சதவீதம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் அரசு சாா்பில் 71 சதவீதமும், தனியாா் சாா்பில் 29 சதவீதமும் பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:21 pm

DIN

கோவை மாவட்டத்தில் அரசு சாா்பில் 71 சதவீதமும், தனியாா் சாா்பில் 29 சதவீதமும் பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 15 ஆயிரத்து 472 தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதில் 15 லட்சத்து 64 ஆயிரத்து 778 தடுப்பூசிகள் அரசு சாா்பில் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு அரசு சாா்பில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 580 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு கட்டணத்துக்கு 2 லட்சத்து 13 ஆயிரத்து 865 தடுப்பூசிகளும், தனியாா் தொழில் நிறுவனங்கள் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டு தொழிலாளா்களுக்கு 2 லட்சத்து 85 ஆயிரத்து 944 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 959 தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 698 தடுப்பூசிகள் வந்துள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 305 தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

கோவையில் கரோனா தடுப்பூசிகள் அரசு சாா்பில் 71 சதவீதமும், தனியாா் தொழிற்சாலைகளில் பணியாளா்களுக்கு 12.5 சதவீதமும், தனியாா் மருத்துவமனைகளில் கட்டணத்துக்கு 16.2 சதவீதமும், சமுகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 0.3 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.