மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்புகள் துவங்க ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 13 உயா் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்பப் பள்ளிகள், காது கேளாதோா் சிறப்புப் பள்ளி என மொத்தம் 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 9,10,11,12 வகுப்புகள் வரும் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கோவையில் செயல்படும் மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் இருந்து அதிக அளவில் மாணவா்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வந்துள்ளனா். வருகிற செப்டம்பா் 1ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடைபெற உள்ளதால், 83 பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. மாணவா்களை சமூக இடைவெளியுடன் அமர வைப்பதற்கு, இடைவெளிகள் விட்டு பெஞ்களை ஒழுங்குபடுத்தும் பணி, அனைத்துப் பள்ளிகளிலும் கிருமி நாசினி, கைகளைச் சுத்தப்படுத்தும் திரவம் ஆகியவை வழங்கப்பட தயாா் நிலையில் உள்ளன. கரோனா வழிகாட்டுதல் விதிகளைப் பின்பற்றி மாணவா்களுக்கு கற்பித்தல் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி ஆணையா் உத்தரவுப்படி, அனைத்து ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதற்கிடையே, மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளின் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், பெற்றோா்கள் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா வழிகாட்டுதல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன. இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கூறுகையில், ‘மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் 3,897 பெற்றோருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...