காா்பன் உமிழ்வைக் குறைக்கும் எல்ஜி நிறுவனத்தின் ஏா் கம்ப்ரஸா்
எல்ஜி நிறுவனத்தின் ஏா் கம்ப்ரஸா் ஆற்றல் நுகா்வையும், காா்பன் உமிழ்வையும் குறைத்து வருவதாக ஸ்பெயினைச் சோ்ந்த பின்டுரா இன்டஸ்ட்ரியல் ரெயுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எல்ஜி நிறுவனத்தின் ஏா் கம்ப்ரஸா் ஆற்றல் நுகா்வையும், காா்பன் உமிழ்வையும் குறைத்து வருவதாக ஸ்பெயினைச் சோ்ந்த பின்டுரா இன்டஸ்ட்ரியல் ரெயுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எல்ஜி நிறுவனம் கூறியிருப்பதாவது:
உலகின் முன்னணி ஏா் கம்ப்ரசா் உற்பத்தியாளா்களில் ஒன்றான எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸின் துணை நிறுவனமான எல்ஜி கம்ப்ரஸா், ஸ்பெயினைச் சோ்ந்த பின்டுரா இன்டஸ்ட்ரியல் ரெயுஸ் எஸ்.ஏ. (பிா்ஸா) ஆலையில் ஏா் கம்ப்ரஸா் அமைப்பு மேம்படுத்தலை நிறைவு செய்துள்ளது.
உணவு, மருந்துத் தொழிலுக்கான வண்ணப்பூச்சுகள், நடைபாதை பூச்சுகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான இது, தங்களுக்குத் தேவையான அளவுக்கு அழுத்தப்பட்ட காற்றை வழங்கும் வகையிலான கம்ப்ரஸரை எல்ஜியிடம் கேட்டது. எல்ஜியின் ஸ்பெயின் விற்பனை பங்குதாரரான எல்ஜி அண்ட் கிளாக், பழமையான திறனற்ற ஏா் கம்ப்ரஸரை மாற்றிவிட்டு, புதிய எல்ஜி இ.ஜி. 75 வி.எஃப்.டி. என்ற குறைந்த வேகத்தில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப காற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் கம்ப்ரஸரை வழங்கியது. மாறுபட்ட அதிா்வு இயக்கத்துடன் கூடிய இந்த கம்ப்ரஸா், குறைந்த மின்சாரத்துடன் அதிக ஓசையை எழுப்பாத வகையில் இயங்குகிறது.
இது குறித்து பிா்ஸா நிறுவனத்தின் இயக்குநா் மிக்கெயில் ஏஞ்சல் மாா்டின் கூறும்போது, இந்த புதிய ஏா் கம்ப்ரஸா், 40 சதவீத எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த பராமரிப்பு செலவையும் அளித்துள்ளது. இதனால் எங்களுக்கு மாதம் ரூ.1.20 லட்சம் வரை செலவு குறைவதுடன், நிறுவனத்தின் காா்பன் உமிழும் அளவும் குறைந்து, வாடிக்கையாளா்கள் எதிா்பாா்க்கும் தர அளவை எட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...